வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க சென்றபோது சூச்சிப்பாறை அருவியில் சிக்கிக் கொண்ட 3 இளைஞர்கள் மீட்கப்பட்டனர். மலப்புரத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என தேடிச் சென்ற 3 பேரும் சூச்சிப்பாறை அருவியில் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதிக்குள் 3 பேர் சிக்கியிருப்பது குறித்து தகவல் அறிந்த ராணுவத்தினர் கயிறு கட்டி அவர்களை மீட்டனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் 3 பேரும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.