திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி முதல்வர் பினராயி விஜயன் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கேரளா வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு 5 அமைச்சர்கள் விரைந்துள்ளனர். நிலச்சரிவு மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வனத்துறை உள்ளிட்ட 5 துறை அமைச்சர்கள் செல்கின்றனர். வனத்துறை அமைச்சர் சசீதரன் ஏற்கெனவே நிகழ்விடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்கிறார் என பினராயி விஜயன் கூறினார்.