வயநாடு: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் மோகன்லால் ரூ.3 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளார். விஷ்ணுசாந்தி அறக்கட்டளை சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும் என்று நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார். கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி வழங்குவதாக நடிகர் மோகன்லால் தெரிவித்தார். முண்டகையில் நிலச்சரிவால் சேதமடைந்த பள்ளியை கட்டித் தருவதாகவும் நடிகர் மோகன்லால் உறுதி அளித்தார்.