சென்னை: குடிநீர் வரியை இ-சேவை மையம், டிஜிட்டல், காசோலை, வரைவோலையாக மட்டும் செலுத்தவேண்டும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. குடிநீர் வரி மற்றும் கட்டணம் ரொக்கமாக பெறப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் விளக்கமளித்துள்ளது. குடிநீர் கட்டணங்கள் அக்டோபர்.1 முதல் ரொக்கமாக பெறப்பட மாட்டாது என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.