ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தமிழ்நாடு உருது தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், உருது மொழியை பாதுகாத்து முஸ்லிம் சிறுபான்மை மக்களின் அரணாக திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு, அனைத்து மாவட்ட உருது தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாநாட்டில் நன்றி தெரிவித்தனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் குடிநீர் குடிப்பதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நமது மாநிலத்தில் வாய்மொழி உத்தரவாக ஆசிரியர்கள் அதை நிறைவேற்றி வருகிறார்கள். வரும் காலங்களில் இந்த குடிநீர் நேரம் ஒதுக்குதல் குறித்து மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,389 அரசு பள்ளிகள் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி செயல்படுத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். மேலும், புதிதாக வரும் பள்ளிகளுக்கு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் கூறினார்.