சென்னை : நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆர்.ஏ.புரத்தில் நீர் நிலையில் கட்டிய வீட்டை காலி செய்ய வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. செல்வி என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது : ஐகோர்ட்
0