ராணிப்பேட்டை: நீர்வளத்துறை பற்றி அன்புமணிக்கு முழுமையாக தெரியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை அக்ராவரம் கிராமத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ முகாம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; நீர்வளத்துறை பற்றி அன்புமணிக்கு முழுமையாக தெரியாது. திமுக ஆட்சியில் தான் 48 அணைகள் கட்டியுள்ளோம். காவேரி பிரச்சனை தீர்த்ததும், முல்லை பெரியாறு அணை பிரச்சனை தீர்த்ததும் திமுக தான். யார் வேண்டுமென்றாலும் அரசியல் கட்சி தொடங்கவும், அரசியல் செய்யவும் கொடி ஏற்றவும் உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது. இது ஜனநாயக நாடு என அவர் தெரிவித்துள்ளார்.