மதுரை: காரைக்குடி நகரில் உள்ள குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றவும், ஆழ்துளைக் கிணறுகளை மூடவும், மாசுபட்ட தண்ணீரை கொண்ட ஆழ்த்துறைக் கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து விநியோகம் செய்ய தடை வித்திக்ககோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு சோமன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடம், மக்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மக்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
previous post