மதுரை: புதுக்கோட்டை நீர்நிலை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டியதை அகற்ற கோரி உயர்நீதிமன்றமதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையில், நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு ஆன செலவுகளை அதற்கு அனுமதி தந்த அதிகாரிகளிடம் ஆட்சியர் வசூல் செய்ய வேண்டும். நீர்நிலை பகுதிகளில் எவ்வித கட்டடமும் கட்டக்கூடாது என ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த காசிராஜன் தாக்கல் செய்த வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.
நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
0