சென்னை: மழைக்காலத்துக்கு முன்னரே பூங்காக்கள், சாலைகள், கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகள் அகற்றப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை கே.கே.நகர் சிவன் பூங்காவில் நடந்துவரும் தூய்மை பணியை சென்னை மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆய்வு செய்தனர். கடந்த 2 மாதங்களாக பேருந்து சாலைகள் முழுவதும் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.