வாஷிங்டன்: நேரம் காட்டும் கைக்கடிகாரம் என்ற போதிலும் செய்யப்படும் பொருள் வடிவம் உள்ளிட்டவற்றால் பலகோடிகளுக்கு கைக்கடிகாரங்கள் விற்கப்படுகின்றன. தங்கம், பிளாட்டினம், வைரம், டைட்டானியம் துருப்பிடிக்காத எக்கு உள்ளிட்ட உயர்தர பொருட்களை கொண்டு ஆடம்பர கைக்கடிகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. முழுக்க கைகளாலேயே பார்த்து பார்த்து வடிவமைத்து இந்த சூழலிலும் சேதம் ஏற்படாத வகையில் வடிவமைக்க படுவதாலேயே லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரை இவை விலை போகின்றன. கௌரவத்தின் அடையாளமாக மாரி இருக்கும் கைக்கடிகாரங்களில் இந்த ஆண்டு பல மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன. அந்த வகையில் நூற்றாண்டு பெருமை கொண்ட ரோலக்ஸ் அறிமுகம் செய்துள்ள லேண்ட் டுவெல்லர் மாடல் இது.
கை அசைவில் இருந்து தொடர்ந்து இயங்கும் ஆற்றலை வாட்ச் பெற்று கொள்கிறது. ஒரு வேலை வாட்சை கழற்றி வைத்து விட்டாலும் சேமித்து வைத்திருக்கும் ஆற்றல் மூலம் 66 மணி நேரம் வரை இயங்கும் அதன் பிறகு கீ கொடுத்து இயக்க வேண்டும். துரு பிடிக்காத எக்ஃகு, தங்கம், பிளாட்டினம் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள வாட்ச் 36 மில்லி மீட்டர் 40 மில்லி மீட்டர் விட்டங்களில் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை ரூ.11 லட்சத்து 88 ஆயிரம் முதல் ரூ.1 கோடி வரையாம் . பல்கேரி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள உலகின் மிகவும் எளிதான இந்த வாட்சின் விலை கேட்டால் வாயடைத்து போவீர்கள். ஆட்டோ பெலிஸ்மோ அல்ட்ரா டூர் வில்லியம் என்ற மாடல் 1.85 மில்லி மீட்டர் தடிமன் கொண்டது. டைட்டானியத்தால் செய்யப்பட்ட இந்த வாட்ச் மொத்தம் 20 மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.
இதன் விலை ரூ.5 கோடியே 80 லட்சம் ஆகும். வழக்கமான கைக்கடிகாரத்தை போல் இல்லாமல் வித்தியாசமாக டாங்கே கென்ஜட் என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது பிரான்சின் கார்ட்டியரின் நிறுவனம் முதல் உலக போரில் பயன்படுத்தப்பட்ட ராணுவ டாங்கிகளை பார்த்து அந்த உந்துகோளில் இந்த மாடலை வடிவமைத்திருக்கிறார்கள். பழைய மாடலை இன்றைக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றி அறிமுகம் செய்திருக்கிறது கார்ட்டியர் .பிளாட்டினத்தால் ஆனா இந்த வாட்சின் விலை ரூ.52 லட்சம் உலகிலேயே மிகவும் எடை குறைவான மெக்கானிக்கல் வாட்சை உலிஸீ நார்டின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டைவர் ஏர் என்ற மாடலின் விலை 52 கிராமுக்கு குறைவானது. டைட்டானியம் கார்பன் பைபரால் ஆன வாட்ச் கழற்றி வாய்த்த பிறகும் 90 மணி நேரம் இயங்கும். இதன் விலை 36 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய்.