டெல்லி: பாஜக அரசு கொண்டுவந்த வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு பாஜகவின் கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அளித்த ஆதரவை திரும்பப்பெற்றது. ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவர் சஞ்சய் ஜா, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மொகத் ஜமா கான் ஆகியோர் ஒன்றிய அமைச்சர் கிரிண் ரிஜிஜுவை சந்தித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.