டெல்லி: வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகளை பதிவுசெய்ய வலைப்பக்கத்தை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. வக்ஃபு சொத்துகளை பதிவுசெய்வதற்கான விதிமுறைகள் அடங்கிய அறிவிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டது. அரசு அறிவித்த வலைப்பக்கத்தில் பதிவாகும் வக்பு சொத்துகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்படும். இவ்வாண்டு நிறைவேற்றிய வக்ஃபு திருத்தச்சட்டத்தின் பிரிவு 108 பி வழங்கும் அதிகாரத்தின் கீழ் வலைப்பக்கம் உருவாக்கப்பட்டது.
வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகளை பதிவுசெய்ய வலைப்பக்கம்: ஒன்றிய அரசு
0