புதுடெல்லி: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டு குழு ஆய்வுக்கு அனுப்பப்பட் டுள்ளது. இந்நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பற்றி முஸ்லிம்களிடம் கருத்து கேட்க பாஜ சிறுபான்மையினர் பிரிவு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து கருத்துகளை கேட்டு, நாடாளுமன்ற கூட்டு குழுவிடம் தெரிவிக்க உள்ளனர்.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து முஸ்லிம்களிடம் கருத்து கேட்க பாஜ குழு அமைப்பு
previous post