அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு செல்போன் டவரில் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 4 பேட்டரிகளை திருடிய வழக்கில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த உதயசங்கரை (35), அரும்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த உதயசங்கர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த 4 ஆண்டாக தலைமறைவானார்.
அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், அரும்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார், செல்போன் சிக்னலை வைத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் பதுங்கி இருந்த உதயசங்கரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.