வாலாஜாபாத்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் ஒன்றிய, பேரூர் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே நடந்தது. இதில், ஒன்றிய அவை தலைவர் சுந்தரமூர்த்தி, பேரூர் அவைத்தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதனை தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய மற்றும் பேரூர் கிளைகள் தோறும் உள்ள கொடி கம்பங்களில் இரு வண்ணங்கள் பூசி புது பொலிவுடன் கொடியேற்றி மக்களுக்கு இனிப்புகள் வழங்க வேண்டும்.
பேரூர் மற்றும் ஒன்றியங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை அதிக அளவில் வழங்கிட வேண்டும். மேலும் பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஆண் குழந்தைகள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்சய்காந்தி. மாவட்ட மாணவர் அணி நிர்வாகி சுரேஷ்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் குப்புசாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் குமரன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சுகுமாரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.