நீலகிரி: உதகை அருகே மலைச்சாலையில் சென்ற கார் சாலையோர பள்ளத்தில் உண்டு விபத்துக்குள்ளானது. உதகை அருகே பிங்கர்போஸ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து, சாலைப் பள்ளத்தில் இருந்த வீட்டின் கூரை மீது கார் பாய்ந்தது. நீலகிரி மாவட்டம் உதகைக்கு சென்னையை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சுற்றுலா வந்தனர். அபோது பிங்கர்போஸ் பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட ஓரமாக ஒதுங்கியபோது பள்ளத்தில் விழுந்தது.
அப்போது அங்கிருந்த வீட்டின் மேல்கூரை மீது அந்த கார் பாய்ந்து நின்றது. காரில் பயணித்தவர்கள், வீட்டில் இருந்தவர்கள் எவ்வித காயமின்றி தப்பியதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டின் உள்ளே இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள். நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீட்டின் சேதத்திற்கு பொறுப்பேற்பதாக காரின் உரிமையாளர் கூறியதை அடுத்து கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உதகை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.