Friday, April 19, 2024
Home » அப்பள வத்தக்குழம்பு

அப்பள வத்தக்குழம்பு

by Lavanya

தேவையானவை:

புளி – எலுமிச்சை அளவு,
மிளகாய்தூள் – 3 டீஸ்பூன்,
பெருங்காயம் – அரைடீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவையான அளவு,
நல்லெண்ணெய் – கால் கப்,
அப்பளம் – 3.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
வெந்தயம் – அரைடீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் -4, எண்ணெய் – கால் கப்.

செய்முறை:

புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். அப்பளத்தை ஒன்றிரண்டாக ஒடித்துவைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேருங்கள். இதுஇளம் பொன்னிறமானதும், அப்பளத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, புளித்தண்ணீரைச்சேருங்கள். அத்துடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து பச்சை வாசனைபோகக் கொதிக்க விட்டு இறக்குங்கள். வாசனை ஆளைத்தூக்கும் அட்டகாசமான குழம்பு இது.

You may also like

Leave a Comment

two + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi