திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தனின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் (வயது 101). ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த அச்சுதானந்தன் 2006 முதல் 2011வரை கேரள முதல்வராக செயல்பட்டுள்ளார். தற்போது வயது மூப்பு காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார்; ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்கள் தலைமையிலான குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் வி.எஸ். அச்சுதானந்தனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியாகியுள்ளது. அவரின் உடல்நிலை சீராக உள்ளது., மருத்துவர்கள் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.