
டிவிஎஸ் நிறுவனம் ஒன்றை சீட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.93,719 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பிளிட் சீட் மாடலை விட இது சுமார் ரூ.1,000-ம், ஸ்மார்ட் கனெக்ட் வேரியண்டை விட ரூ.7,000-ம் குறைவு. மற்றபடி, வாகனத்தின் தோற்றத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதில் உள்ள 124.8 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டார், அதிகபட்சமாக 11.2 பிஎச்பி பவரையும் 11.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.
மணிக்கு 60 கி.மீ வேகத்தை, 5.9 நொடிகளில் எட்டும். இந்த பைக்கில் ரிவர்ஸ் எல்இடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோ மீட்டர், டிரிப், எரிபொருள் அளவு, எந்த கியரில் உள்ளது போன்ற விவரங்களை இதில் பார்க்கலாம். மேலும், யுஎஸ்பி சார்ஜிங் வசதி, சீட்டுக்கு அடியில் சிறிய அளவிலான ஸ்டோரேஜ் வசதி உள்ளது.