சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வி.பி.சிங் இன்று உயிருடன் இருந்திருந்தால், பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதையும், இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டதையும் பாராட்டியிருப்பார். எனவே, வி.பி.சிங் உருவச் சிலை திறப்பு விழாவில், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும்.