புதுடெல்லி: தேர்தல் நடக்கும் சமயத்தில் வாக்கு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்தால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மாலை 6 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு நேரம் முடிந்த பிறகு 76 லட்சம் பேர் வாக்களித்தது பல்வேறு சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், தோராயமான வாக்கு சதவீத தரவுகளை சரியான நேரத்தில் புதுப்பிக்க ஒழுங்குபடுத்தப்பட்ட, தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பை அறிமுகப்படுத்துவதாக தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. ‘ஒவ்வொரு வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரி வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை இசிஐநெட் செயலியில் வாக்கு சதவீதத்தை பதிவு செய்வார். இதன் அடிப்படையில் வழக்கம் போல் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் தொடர்ந்து தோராய வாக்கு சதவீதங்கள் வெளியிடப்படும். மேலும், வாக்குப்பதிவு முடிந்த உடனேயே தலைமை அதிகாரி வாக்குச்சாவடியை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக, இசிஐநெட் செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தை பதிவு செய்வார்’ என கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு வாக்கு சதவீதத்தை புதுப்பிக்க புதிய வசதி
0