காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சுற்றுசூழலை பாதுகாக்கும்விதமாக மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணி களை பிடுங்கும் பணியில் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகர சாலைகளில் இரு புறங்களில் உள்ள மரங்களில் தனியார் வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காக ஆணி அடித்து பலகைகள் வைக்கின்றனர். இதனால் மரங்கள் பட்டு நாளடைவில் அழிந்துவிடுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பசுமை இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு, பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து சாலையில் இருபுறங்களில் உள்ள மரங்களில் ஆணி அடித்து வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அப்புறப்படுத்தி மரத்தில் இருக்கும் ஆணியை பிடுங்கி மஞ்சள் தடவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்று சூழலை பேணி காக்கும் விதமாகவும், மரங்களை பாதுகாக்கும் வகையிலும் இந்த பணியை முன் னெடுத்துள்ளதாகவும், தொடர்ந்து பணி நடக்கும் எனவும் தன்னார்வ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.