சென்னை: பா.ம.க.வின் பொதுக்குழு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆலோசனை கூட்டமே இன்று நடக்கிறது. பா.ம.க.வின் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் நான் என அன்புமணி பேசியுள்ளார். தொண்டர்கள் இல்லாமல் பாமக கிடையாது; பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களின் சொத்து தனிப்பட்ட நபரின் சொத்து அல்ல. ராமதாஸின் கொள்கைகளை மனதில் நிறுத்தி களத்தில் நாம் செயல்பட வேண்டும். பாமகவில் அடிமட்ட தொண்டனாக செயல்படுவேன், பொறுப்புகள் வரும் போகும். ஆனால் நிரந்தரமானது உங்களின் அன்பும் பாசமும்தான். அது என்றுமே போகாது என அன்புமணி கூறினார்.
தொண்டர்கள் இல்லாமல் பாமக கிடையாது: அன்புமணி பேச்சு
0