சென்னை: சென்னையில் நேற்று நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: பத்திரிகையாளர்கள் எதிர்பார்த்த செய்தியை என்னால் கொடுக்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும். அந்த தீர்வு கட்சிக்கும், நாட்டுக்கும் சரியான தீர்வாக இருக்கும். அதுவரை உங்களிடம் இருந்து பிரியாவிடை பெறுகிறேன். பாஜவுக்கு எதிரான நிலைபாட்டில் தான் தற்போதும் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு இப்போது சொல்ல முடியாது. தொண்டர்கள் எப்போதும் என் பக்கம்தான். என்னை குல தெய்வமாக கடவுளாக நினைக்கும் தொண்டர்கள். அவர்கள் என் சொந்தங்கள். அவர்கள் தான் எனக்கு வழிகாட்டிகள். அவர்கள் நலன், முன்னேற்றத்துக்காக எதையும் செய்வேன் என்றார். பாமக இடதுசாரி சிந்தனையுடன் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. தற்போது வலதுசாரி சிந்தனைகள் அதிகரித்துள்ளது என திருமாவளவன் கூறியுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேட்டபோது, ‘‘என்னிடம் பூதக்கண்ணாடி இல்லை’’ என தெரிவித்தார்.
தொண்டர்கள் எப்போதும் என் பக்கம் தான்: ராமதாஸ் பேட்டி
0