தேனி: எங்களிடம் இருப்பது தொண்டர் படை; பழனிசாமியிடம் இருப்பது குண்டர் படை என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். முதல்முறையாக ஓ.பன்னீர்செல்வம் – டி.டி.வி. தினகரன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. துரோகத்தை தவிர வேறு எதையும் அறியாதவர்கள் எடப்பாடி அணியினர் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.