Sunday, April 21, 2024
Home » தொகுதிக்கு 70 சதவீதம் பேருக்கு காந்தி நோட்ட தட்டிவிட ரகசிய உத்தரவு வந்திருப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

தொகுதிக்கு 70 சதவீதம் பேருக்கு காந்தி நோட்ட தட்டிவிட ரகசிய உத்தரவு வந்திருப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

by Mahaprabhu

‘‘களத்துல குதிச்ச தேனிக்காரர் தனது தலையெழுத்த எண்ணி தலையில அடிச்சிக்கிட்டாராமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘தாமரை கட்சி தலைமையிலான கூட்டணியில் கடலோர மாவட்ட தொகுதியில் தேனிக்காரர் ேபாட்டியிடுகிறார். தனது ஆதரவாளர்களுடன், தாமரை கட்சியினரின் ஆதரவும் இருக்கும்னு நினைத்து களத்தில் குதிச்சிட்டாராம்.. ஆனால், தாமரை தரப்பிலோ பல கோஷ்டிகள் உள்ளதாம்.. குறிப்பா தற்போதைய மாவட்ட நிர்வாகி தரப்புக்கும், முன்னாள் மாவட்ட நிர்வாகி தரப்புக்கும் சுத்தமாக ஆகாதாம்.. கடந்த சில நாட்களுக்கு முன் முதுகுளத்தூரில் கூட்டணி கட்சியினரின் கூட்டம் நடந்திருக்கு.. இதில கலந்துகொண்ட தாமரை தரப்பினர் தங்களது ஆதரவாளர்கள் எனக்கூறி இருதரப்பினரும் நீண்டதோர் பட்டியலை கொடுத்திருக்காங்க.. தங்களது ஆதரவாளர்கள் பெயரை விடுபடாமல் வாசிக்க வேண்டும்னு அன்பு கட்டளையும் போட்டாங்களாம்.. அப்போது இருதரப்பினரும் மாறி மாறி கோஷமிட்டிருக்காங்க.. இதனால் அப்செட்டான தேனிக்காரர் இதெல்லாம் என்னோட தலையெழுத்து என நினைச்சிட்டு பட்டியலை வாசித்து முடித்தாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டம் பிரியாணி ஊர்ல, காக்கிகள் படை வீரரு அட்ராசிட்டி அதிகமாகிடுச்சாமே…’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல 4 எழுத்து பெயர் கொண்ட பிரியாணிக்கு பெயர்போன ஊர்ல, காக்கிகள் நிலைய எல்லையில, ஊரோட காக்கிகள் படைய சேர்ந்த நபரோட அட்ராசிட்டி உச்சகட்டத்தை எட்டியிருக்குதாம். கடந்த சில நாளுக்கு முன்னாடி ஒரு ஊரை காக்கும் படை வீரர், நான்தான் போலீஸ் எனக்கூறி நெடுஞ்சாலையில, ஒரு பெட்ரோல் பங்க்ல தகராறு செஞ்சாராம்.. அங்க பெட்ரோல் போட வந்தவரை தாக்கி அவரது சட்டையை கிழிச்சு ஹெவி வெயிட் காட்டினாராம்.. பாதிக்கப்பட்டவரு, டவுன் காக்கிகள் நிலையத்துக்கு போனா, புகார் வாங்கவே இல்லையாம்.. பாதிக்கப்பட்டவர்கிட்டயே சமாதானம் பேசி அனுப்பி வெச்சதாக சொல்றாங்க.. இதுல விஷயம் என்னன்னா? அந்த ஊரோட காக்கிகள் படையே சேர்ந்த நபரு, சேண்ட் கேங்ல சம்திங் வாங்க ரூட் போட்டு கொடுக்குற அளவுக்கு அவர் கை ஓங்கியிருக்குதாம்.. காக்கிகள் தப்பு செஞ்சா ஸ்டேட் ெலவல்ல உடனடி ஆக்‌ஷன் எடுத்து வர்ற நேரத்துல, மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல இருக்குற பிரியாணி ஊர்ல, காக்கிகள் படை நபர் இப்படி ஆட்டம் போடுறாரே, மாவட்ட உயர் காக்கி விசாரிச்சு, உரிய நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை குரல் ஒலிக்க தொடங்கியிருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தொகுதிக்கு 70 சதவீதம் பேருக்கு காந்தி நோட்ட தட்டிவிட ரகசிய உத்தரவு வந்திருக்கிறதா இலை கட்சிக்காரங்க கிட்ட பேச்சு அடிபடுதே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர், மம்மியோட மந்திரி சபையில் அமைச்சராக இருந்தாலும், கூவத்தூருக்கு பிறகுதான் இவரும் மந்திரி சபையில் இருந்தாரா என்ற கேள்வியே எல்லோருக்கும் எழுந்துச்சி. இப்படி இருக்கையில், அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்ட குக்கர்காரர், சின்ன மம்மி, தேனிக்காரர் என அனைவரையும் விரட்டி விட்டுட்டாரு. அதே நேரத்துல கூட்டணி இல்லாம தேர்தலை சந்திக்கும் தைரியம் எப்படி வந்தது என கட்சிக்காரங்களே மூக்கின்மேல் விரலை வைக்காங்களாம்.. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பெரும் தொகையை களத்தில் இறக்க திட்டமிட்டுள்ளதாக கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க..

தோல்வியையே தழுவினாலும் மனம் கலங்காது, சேமிப்பு எல்லாம் போய்விட்டதே என கண்ணீர் சிந்தும் வேட்பாளர்கள் இல்லாமல் எதிர்காலம் நமக்கு வரும் என்ற எண்ணத்தில் இருந்தவர்களை, நம்ப வைத்து ஒவ்வொருவரிடமும் குறைந்தது ‘‘25 சி’ க்களை வாங்கி பதுக்க வேண்டிய இடத்துல பதுக்கிட்டாராம்.. தற்போது மெல்ல மெல்ல கரன்சி வெளியே வரத்தொடங்கியிருக்காம்.. மொத்தமுள்ள 40 தொகுதியிலும் தொகுதிக்கு 70 சதவீதம் பேருக்கு காந்தி நோட்டை தட்டிவிடவேண்டும்னு ரகசிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கட்சிக்காரங்ககிட்ட பேச்சு எழுந்திருக்கு.. அதுவும் பூத் கமிட்டி மூலமாகத்தான் போகணுமுன்னு சொல்லப்பட்டிருக்காம்.. இதனால கூட்டணி கட்சிக்காரர்களும் ரொம்பவே ஹேப்பியா இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பறக்கும் படை குழம்பித் தவிக்குதாமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு 30 பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 26 லட்சம் பணம், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறக்கும்படையினர் பிடித்து வருவாய்துறையினர் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் பறக்கும்படையினர் பணம் பறிமுதல் செய்தால் அவர்களிடம் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் இருந்து அதிகாரிகள் பேசுவதாக கூறி இந்தியிலும் ஆங்கிலத்திலுமாக பேசுகின்றனர்.

அவர்கள் பணம் பிடிபட்டது தொடர்பாக பறக்கும் படையினரிடம் எங்கு, எப்போது, யார் தகவலில் பிடித்தீர்கள், எங்கு கொண்டு செல்லப்படுகிறது, பணம் கொண்டு வந்தவர்கள் வியாபாரிகளாக இருந்தாலும் சாதாரண பொதுமக்களாக இருந்தாலும் அவர்கள் ஒரு அரசியல் கட்சியை கூறி அதன் நிர்வாகிகளா என கேள்விகள் கேட்ேட துளைத்தெடுத்து வருகிறார்களாம். இதனால் போனில் பேசுபவர்கள் யார், எதற்காக ேபசுகிறார்கள், உண்மையிலேயே அவர்கள் தேர்தல் கமிஷனை சேர்ந்தவர்கள் தானா, 50 ஆயிரத்துக்கு மேல் ஆவணங்கள் இல்லாமல் யார் பணம் கொண்டு சென்றாலும் பிடியுங்கள் என உத்தரவிட்ட தேர்தல் ஆணையம் தற்போது இப்படி கேள்விகேட்டே கொன்று வருகிறதே என பெரும் குழப்பத்தில் உள்ளனர் தூத்துக்குடி மாவட்ட பறக்கும் படையினர்…’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

8 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi