போக்ஸ்வேகன் நிறுவனம், டாய்கன் மற்றும் விர்டஸ் கார்களின் ஓணம் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் சந்தைப்படுத்த இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கார்களும் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் முழுவதுமாக கருப்பு நிற தீமில் உருவாக்கப்பட்டுள்ளன. கூடுதல் அம்சமாக முன்புறம் பார்க்கிங் சென்சார்கள், டூயல் டோன் ஹாரன் ஆகியவை இடம் பெற்றுள்ளன. டாய்கன் ஜிடிமற்றும் விர்டஸ் ஹைலைன் கார்களின் அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். இது அதிகபட்சமாக 115 எச்பி பவரை வெளிப்படுத்தும். ஸ்பெஷல் எடிஷன் என்றாலும், பேஸ் வேரியண்ட் விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஷோரூம் விலையாக டாய்குன் சுமார் ரூ.14.08 லட்சம் முதல் ரூ.15.63 லட்சம் வரையிலும், விர்டஸ் ரூ.13.57 லட்சம் முதல் ரூ.14.87 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.