‘‘இலைக்கட்சி தலைவருக்கும் தேனிக்காரருக்குமான மோதலில் உண்மையில்லையாமே சொல்லுங்க..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் தலைவருக்கும், தேனிக்காரருக்கும் இடையேதான் சண்டையே என அனைவரும் நினைத்துக்கொண்டிருக்காங்க.. ஆனால் அது உண்மை இல்லையாம்.. இலைக்கட்சி தலைவருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த வைத்தியானவருக்கும் இடையேயான ரெண்டு நண்பர்களுக்கிடையே நடக்கும் மோதலுன்னு புது தகவல் வெளியாகியிருக்கு.. மம்மி காலத்தில் நால்வர் அணியில் தற்போதைய தலைவரும், வைத்தியானவரும் இருந்தாங்களாம்.. ரெண்டு பேருக்கும் இடையே அப்படி ஒரு நட்பு இருந்துச்சாம்.. பிரிக்க முடியாத நகமும், சதையும்போல இருந்தாங்களாம்.. இந்த நிலையில் கடந்த ஒன்றிய ஆட்சியில் இலைக்கட்சிக்கு ஒரு மந்திரி பதவி தருவதாக சொன்ன நிலையில், தேனிக்காரரின் மகனை மந்திரியாக்க டெல்லி முடிவு செஞ்சி டீ பார்ட்டிக்கு அழைச்சாங்களாம்.. அவரும் மந்திரி கனவுல இருந்திருக்காரு.. இந்த தகவலை தெரிஞ்சிக்கிட்ட இலைக்கட்சி தலைவர், ரெண்டு மந்திரி பதவியை கேளுங்க.. ஒன்றை வைத்தியானவருக்கு கொடுத்திடலாமுன்னு சொல்லியிருக்காரு.. ஆனா ஒன்றுக்கு மேல முடியாதுன்னு ஒன்றியம் கைவிரித்து விட்டதாம்.. அப்படின்னா மந்திரி பதவியே வேண்டாமுன்னு சொல்லிட்டாராம்..
வைத்தியானவருக்கு நல்லது செய்யத்தானே இலைக்கட்சி தலைவர் ரெண்டு கேட்டிருக்காரு.. இதிலென்ன பிரச்னை இருக்குன்னு கேள்வி எழத்தானே செய்யும்… அதுதான் இலைக்கட்சி தலைவரோட தந்திரமுன்னு தேனிக்காரரின் ஆதரவாளர்கள் சொல்றாங்க.. இது தேனிக்காரருக்கும், வைத்தியானவருக்கும் இடையே ஒரு மோதலை ஏற்படுத்த போட்ட திட்டமாம்.. தனக்கு நல்லது செய்வதுபோல கட்சிக்குள்ளே மோதலை ஏற்படுத்த போட்ட திட்டமுன்னு வைத்தியானவருக்கு தெரிந்த பிறகுதான், தேனிக்காரரை தூக்கி பிடிக்கத் தொடங்கினாராம்.. தஞ்சாவூர் பகுதியில் வைத்தியானவருக்கு ஆதரவாளர்கள் ெராம்பவே அதிகமாம்.. இதனால் ெராம்பவே எரிச்சலான இலைக்கட்சி தலைவர், அங்கிருந்து ஒவ்வொருவராக தன் பக்கம் இழுத்துக்கிட்டிருக்காராம்.. வாரம்தோறும் பத்து பேரை அழைச்சிக்கிட்டு வந்து தேனிக்காரரின் ஆதரவாளர்கள் சேர்ந்தார்கள்னு ெசால்றாராம்.. இலைக்கட்சி தலைவருக்கு தேனிக்காரர் கூட ஒரு பொருட்டே இல்லையாம்.. ஏதாவது ஒரு பதவியை கொடுத்து ஓரமா உட்கார வைத்துவிடலாம்.. ஆனால் அவரை இயக்குவதே வைத்தியானவருதான்.. நினைத்தது நடக்காமல் போன ஆத்திரத்தினால்தான் ஆட்களை இழுத்துக்கிட்டு இருப்பதாக தேனிக்காரரின் ஆதரவாளர்கள் சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நான் மாவட்டத்துக்கு செக்ரட்ரி, எனக்கு கீழே தான் நீங்க எல்லாம்னு அதிகார தோரணையில பேசுறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்ட இலைகட்சியில தலா 2 தொகுதிகள் வீதம் பிரிச்சு 4 மாவட்டங்களாக அறிவிச்சாங்க. இதுல போளூரு, ஆறு அணியை மத்திய மாவட்டமாக அறிவிச்சு, மாஜி எம்எல்ஏ ஜெயமான பெண்மணியை மத்திய மாவட்ட செக்ரட்ரியாக நியமிச்சாங்க. இந்த பொறுப்புக்கு வந்ததுல இருந்து அவங்க அமைச்சராகவே தன்னை நினைச்சுகிட்டு செயல்படுறாங்களாம். அந்த 2 தொகுதியில இருக்குற மூத்த நிர்வாகிகளையும் மதிக்குறது இல்லையாம்.
கட்சியில உழைக்குறவங்களுக்கு பதவி கொடுக்கவே இல்லைன்னு ெதாண்டர்களும், நிர்வாகிகளும் அதிருப்தியில இருக்காங்களாம். தொகுதிக்கு போகும்போது தகவலே சொல்றதில்லையாம். கேட்டா.. நான் மாவட்டத்துக்கு செக்ரட்ரி எனக்கு கீழே தான் நீங்கள்னு அதிகார தோரணையில பேசுறாங்களாம். போன எலக்ஷன்ல வாக்கு குறைஞ்சதுக்கும் இவங்கதான் காரணம்னு தலைமைக்கு புகார் கொடுத்திருக்காங்களாம். எங்களை மதிக்காத செக்ரட்ரி பதவியில இருக்கக்கூடாதுன்னு அந்த 2 தொகுதி எம்எல்ஏக்களும் அதற்கான பணியில மும்முரமா ஈடுபட்டிருக்காங்கனு அந்த கட்சியில இருக்குறவங்க பரபரப்பா பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எந்தப் பக்கம் போனாலும் கேட்டை போட்டா நான் என்ன செய்றதுன்னு சேலத்துக்காரர் மண்டை காய்கிறாராமே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்ட இலைக்கட்சியின் மாவட்ட முக்கிய பொறுப்பில் சாமியானவர் இருக்கிறார். இவரு சேலத்துக்காரரின் தீவிர ஆதரவாளர். இவரின் மனைவியும் மாநில மகளிரணியில் பொறுப்பில் இருக்கிறாரு.. இவர், கடந்த 2 சட்டமன்றத் தேர்தல்களிலும் தனது சொந்த தொகுதியில் போட்டியிட்டதில் தோல்வியே மிஞ்சியது.. அதே நேரம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இலைக்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு 3ம் இடம் தான் கிடைத்திருக்கு.. தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டத்தில், சேலத்துக்காரர் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் ஒற்றை கோரிக்கையாக மாவட்ட முக்கிய நிர்வாகியான சாமியானவரை மாற்ற வேண்டுமென்னு கூறினராம்.. தனது தீவிர ஆதரவாளரை எப்படி மாற்றுவதுன்னு தயங்கிய சேலத்துக்காரர், மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தலா 2 மாவட்டங்கள் வீதம் இரண்டாக பிரித்து 2 மாவட்ட செயலாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளாராம்..
குளத்தூர்னு முடியும் தங்களது சொந்த தொகுதி ராசியில்லாததால், திரு என துவங்கும் தொகுதியில், அடுத்த சட்டமன்ற தேர்தலில், தான் அல்லது தனது மனைவியை களமிறக்க முடிவு செய்த சாமியானவர், அதற்கேற்ப மாவட்ட பொறுப்பை கேட்கிறாராம்.. ஆனால், ஏற்கனவே தங்களுக்கு பொறுப்பு கேட்டு மாஜி மந்திரிகள் 2 பேர், சேலத்துக்காரரிடம் துண்டு விரித்து காத்திருக்கின்றனராம்.. இவர்களும் நமக்கு வேண்டிய ஆளுகதான்… யாரிடம் பொறுப்பை வழங்குவது? எந்த பக்கம் போனாலும் கேட்டை போட்டால், என்ன செய்வதுன்னு புரியாமல் சேலத்துக்காரர் மண்டை காய்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தலைமையிடத்தில் வாய்ஸ் எடுபடாததால் சைலண்டாக இருந்து வரும் மாஜி அமைச்சர் யாரு..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சி சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின் மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ சைலண்டாக இருந்து வருகிறாராம்.. கட்சி நிர்வாகிகளிடம் கூட பேசுவதை குறைத்து விட்டாராம்… தேனிக்காரர் அணியில் இருந்து விலகி சேலத்துகாரர் அணியில் சேருவதற்கு வந்த மாஜி அமைச்சர் இரண்டு எழுத்து பெயரை கொண்டவரை சேர்க்க வேண்டாம்னு மணியானவர் சேலத்துக்காரரிடம் முறையிட்டாராம்…. அப்போது சேலத்துக்காரர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் சிபாரிசு செய்த வேட்பாளர் வாங்கிய வாக்குகளை பார்க்கும் போது கடலோர ெதாகுதியில் உங்கள் பக்கம் இருந்த செல்வாக்கு முழுவதும் குறைந்துவிட்டது. மக்கள் மத்தியிலும், கட்சியிலும் உங்களுக்கு நல்ல பெயர் இல்லை. இதனால் அவரை கட்சியில் சேர்த்து தான் ஆக வேண்டும்னு கூறி மணியானவரிடம் சேலத்துக்காரர் கடிந்து கொண்டாராம்.. இதனால் அப்செட்டில் இருந்து வரும் மணியானவர், இனி கட்சியில் நம்ம வாய்ஸ் சேலத்துக்காரரிடம் எடுபடாதுனு ைசலன்டாக இருக்காராம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.