ஜெயங்கொண்டம், ஜூலை 28: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணதிரையன்பட்டிணம் கல்சாவடிகொட்டா தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் பச்சமுத்து(27). இவருக்கு இரு குழந்ைதகள். இவரது மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்ததை பச்சமுத்து கண்டித்துள்ளார். இதனால் கல்பனா மனமுடைந்து தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சித்தார். அருகில் இருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் மன வேதனையில் இருந்த பச்சமுத்து விஷமருந்தி வீட்டில் மயங்கி கிடந்தார். அருகில் இருந்தோர் அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த பச்சமுத்து நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.