Friday, April 19, 2024
Home » உள்நாடு, வெளிநாடுகளில் 125 மையங்களில் விஐடி நுழைவுத்தேர்வு தொடங்கியது

உள்நாடு, வெளிநாடுகளில் 125 மையங்களில் விஐடி நுழைவுத்தேர்வு தொடங்கியது

by Karthik Yash

வேலூர்: விஐடியில் கணினி நுழைவுத் தேர்வு வெளிநாடு மற்றும் உள்நாட்டிலுமாக 125 மையங்களில் துவங்கியது. விஐடியில் பி.டெக் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு (VITEEE-2023) நேற்று தொடங்கியது. இது வரும் 22ம் தேதி வரை வெளிநாடுகளிலும் மற்றும் உள்நாட்டிலுமாக 125 மையங்களில் கணினி முறையில் நடைபெறுகிறது. நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 26ம் தேதி, www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அன்றே ஆன்லைன் கலந்தாய்வு துவங்குகிறது.

விஐடி வேலூர் வளாக நுழைவுத்தேர்வு மையத்தில் நேற்று துவங்கிய நுழைவுத்தேர்வை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பார்வையிட்டார். அதேபோல், பெங்களூரு மையத்தில் நடந்த நுழைவுத்தேர்வை விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் பார்வையிட்டார். முதல் கட்ட கலந்தாய்வு (26-4-2023 – 30-4-2023) ரேங்க் 1 முதல் 20,000 வரை, 2ம் கட்ட கலந்தாய்வு (9-5-2023 – 11-5-2023) ரேங்க் 20,001 முதல் 45,000, 3ம் கட்ட கலந்தாய்வு (20-5-2023 – 22-5-2023) ரேங்க் 45,001 முதல் 70,000, 4ம் கட்ட கலந்தாய்வு (31-5-2023 – 2-6-2023) ரேங்க் 70,001 முதல் 1,00,000, 5ம் கட்ட கலந்தாய்வு (12-6-2023 – 14-6-2023). ரேங்க் 1,00,000 மேல் உள்ளவர்கள் விஐடி ஆந்திர பிரதேசம் மற்றும் விஐடி போபாலில் மட்டுமே இடம் கிடைக்கும்.

ஜிவி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு கல்வி உதவி: மத்திய, மாநில கல்வி வாரியம் நடத்தும் பிளஸ்2 தேர்வில் மாநில அளவிலான முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு விஐடி பல்கலைக்கழகத்தின் ஜிவி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பி.டெக் படிப்பு பயிலும் 4 ஆண்டு முழுவதும் 100 சதவீத படிப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அத்துடன் விஐடி நுழைவுத்தேர்வில் 1 முதல் 50 ரேங்க் தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு 75 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 51 முதல் 100 ரேங்குக்குள்ளாக தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு 50 சதவீத படிப்பு கட்டண சலுகையும் 101 முதல் 1000 ரேங்குக்குள்ளாக தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு 25 சதவீத படிப்பு கட்டண சலுகையும் 4 ஆண்டு காலம் முழுவதும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியரும் விஐடி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் பிளஸ்2 தேர்வில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு 100 சதவீத படிப்பு கட்டண சலுகையுடன் உணவு, விடுதி வசதியுடன் விஐடி பல்கலைக்கழகத்தில் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

11 + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi