கேரளா: 2021ம் ஆண்டு வரதட்சணை விவகாரத்தில் புதுமணப்பெண் விஸ்மயா தற்கொலை செய்த வழக்கில், அவரின் கணவன் கிரண் குமாருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், ஜாமினில் விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. சிறை தண்டனைக்கு எதிரான கணவன் கிரண் குமாரின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரிக்க, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.