காஞ்சிபுரம்: விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் 61வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட செயலாளர் மதி.ஆதவன் தலைமை தாங்கினார். விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகள் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விசிக அணி மாநில செயலாளர் பார்வேந்தன் கலந்துகொண்டு எழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், மண்டல துணை செயலாளர் பருத்திகுளம் சேகர், மாவட்ட துணை செயலாளர் திருமாதாசன், தொகுதி துணை செயலாளர் ஸ்டான்லி, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் இந்திரா அம்பேத்கர்வளவன், காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினர் கௌதமி திருமாதாசன், காஞ்சிபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் ரேகா ஸ்டான்லி, காஞ்சிபுரம் நகர செயலாளர் கவியரசு, நகர துணை செயலாளர்கள் செவிலிமேடு ரஞ்சித்வளவன், எம்ஜிஆர் நகர் வினோத்குமார், தொண்டரணி ஜேம்ஸ், தேனம்பாக்கம் ஆனந்தன், திருவீதிப்பள்ளம் கண்ணன், அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.