விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்குள் கேமரா பொருத்தும் மாவட்ட ஆட்சியரின் திட்டத்தைக் கண்டித்து, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அங்குள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.