விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் மொத்தம் 42 ரூம்கள் உள்ளன. இதில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். வேலை நேரத்தில் சல்பரேட் மறுத்து தயாரிக்கும் பொடி வேனிலிருந்து இறக்கும் போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் புலிகுட்டி கார்த்தி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேன் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் தீயணைப்பதில் தொய்வு ஏற்பட்டது.
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேறு ஏதேனும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதா, வேறு யாரேனும் காயம்பட்டுள்ளனரா, உயிரிழப்பு உள்ளதா என்பதை தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி பார்வையிட்டு வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.