பெங்களூரு: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் என்ற மதுபானக்கூடம் (பப்) டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ளது. பெங்களூரு எம்.ஜி சாலையில் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அருகிலேயே விராட் கோலியின் மதுபானக்கூடம் இயங்கிவருகிறது. மதுபானக்கூடங்கள் நிறைந்த எம்.ஜி சாலையில் விராட் கோலியின் ஒன்8 கம்யூன் உட்பட பல பார்கள் இரவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் இயங்குவதாக போலீசாருக்கு புகார்கள் கிடைத்தன. அதன்படி, கடந்த சனிக்கிழமை இரவு போலீஸ் எஸ்.ஐ ஒருவர் விராட் கோலியின் ஒன்8 கம்யூன் மதுபானக்கூடத்திற்கு நள்ளிரவு 1.20 மணிக்கு சென்றபோது திறந்திருந்திருக்கிறது. இரவு 1 மணி வரை மட்டுமே மதுபானக்கூடங்கள் திறந்திருக்க அரசு அனுமதித்திருக்கிறது. ஆனால் அதை தாண்டி திறந்திருந்ததால், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராட் கோலி நடத்தும் பப் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீஸ் நடவடிக்கை
59