பெங்களூரு: பெங்களூருவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ஒன்எய்ட் கம்யூன் என்ற பப்-உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த பப்-உணவகத்தில் புகைப்பிடிப்பதற்கு தனி இடம் ஒதுக்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தது. இது குறித்து, பெங்களூரு போலீசார் புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். விராட் கோலியின் பப்-உணவகத்துக்கு எதிராக ஏற்கனவே 2024 ஜூனில், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மீறி இயங்கியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு டிசம்பரில், தீ பாதுகாப்பு விதிகளை மீறியதாகவும், தீ பாதுகாப்பு சான்றிதழ்கள் இல்லாததற்காகவும் பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலியின் பப் மீது வழக்கு
0
previous post