சென்னை: விராலிமலை அருகே சாலை விபத்தில் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி தலைவர் கருப்பசாமி விபத்தில் உயிரிழந்தார். கருப்பசாமியுடன் காரில் சென்ற கிருஷ்ணபேரி ஊராட்சி தலைவர் வினோதினியின் கணவர் அபிமன்னனும் உயிரிழந்துள்ளார்.