Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

வைரலோ வைரல்

அண்ணனபார்த்தியே!

இணையத்தில் திடீரென டிரெண்டிங் ஆகியிருக்கிறது இந்த ‘ அண்ணன பார்த்தியே‘ பாடல். சென்ற மாதம் முழுக்க நம்ம ‘சீ சீ சீ பொண்ணா நீ‘ பாடல் வைரலானது போல் தற்போது இந்த அண்ணன பார்த்தியே பாடல் எங்கும் ரீல்ஸ்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் இதற்கு இந்தியா முழுக்க உள்ள இன்ஸ்டா குறும்பர்களும் அவர்கள் ஸ்டைலில் ஜாலியாக ரீல்ஸ், ஷார்ட்ஸ் என பகிர்ந்து மகிழ்ந்துவருகிறார்கள். உண்மையில் இது ‘ அனன் ட பாட் சயே‘ என்னும் இந்தோனேசிய பாடல். இதனை இந்தோனேசிய பிரபலம் சில்வி குமலசரி என்கிற பெண் பாடியிருக்கிறார். அவருக்கு வயது 27 . ஜாலியான டிக் டாக் மாடல் மற்றும் டிரெண்டிங் ஸ்டார். இப்போது இந்தியா வரை இந்தப் பாடல் மூலம் படு டிரெண்டிங். அவரது பொம்மை போன்ற அழகும், கொரியன் பார்பி பொம்மை போன்ற தோற்றமும் ஒருசேர சில்வி திடீர் டிஜிட்டல் ட்ரீம் கேர்ள் ஆகியிருக்கிறார்.

பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

மார்ச் 14ஆம் தேதி இந்தியா முழுவதும் வண்ணத் திருவிழாவான ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தது. எங்கும் வண்ணப் பொடிகள், வண்ண மயமான தண்ணீர் என அடித்து மகிழ்ந்தனர். இந்தப் பண்டிகை பொதுவாக வட இந்தியர்களால் கொண்டாடப்படும். இந்நிலையில் சமூக வலைதள வீடியோ பதிவரான சுக்லா என்பவர் வட இந்திய திருவிழாக்கள் அனைத்தையும் பதிவிடுபவர். சமீபத்திய மகாகும்பமேளா உட்பட இவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் டிரெண்டானது. அப்படி ஹோலி பண்டிகையை கொண்டாட உத்திர பிரதேசம் பர்சானா நகரத்துக்குச் சென்றவர் அதிர்ச்சியான வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். கோவில், பண்டிகை காலங்களிலாவது பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களைப் போலவே எந்தக் கவலையும் இல்லாமல் கடவுளை வணங்கவும், பண்டிகையைக் கொண்டாட வரும் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு அவர்களை சங்கடப் படுத்துவது நியாயமா? ஆண்களான உங்களுக்கு இருக்கும் அதே உரிமைதானே அவர்களுக்கும் இருக்கும் பட்சத்தில் ஏன் இப்படியான கீழத்தரமான செயல்களை செய்கிறீர்கள் என கேட்டு வீடியோ பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ பல பெண்களாலும், பெண்ணியவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் பகிரப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.