பெங்களூரு: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை லீக் ஆட்டம், பெங்களூருவில் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக நேற்று முன்தினம் பெங்களூரு வந்த பாகிஸ்தான் வீரர்களில் சிலர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் அணி மீடியா மேலாளர் இப்திகார் நேகி கூறுகையில், ‘கடந்த சில நாட்களில் எங்கள் வீரர்கள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைந்துவிட்டனர். சிலருக்கு சிகிச்சை தொடர்வதுடன், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். கேப்டன் பாபர், வேகப் பந்துவீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி நலமாக உள்ளனர்’ என்றார்.