சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நேற்று களமிறங்கிய வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. வினேஷ் போகத் பழி வாங்கப்பட்டிருக்கிறார் என்று மக்கள் பேசுவதற்குப் பதில் அளிக்கும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கம், பயிற்சியாளர்கள் மீது வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.