டெல்லி: ‘நாங்கள் பதக்கம் பெற்றால், எங்களை சாம்பியன்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் பதக்கம் பெறவில்லை என்றால் மக்களும் எங்களை மறந்துவிடுவார்கள். வினேஷ் போகத் நாட்டுக்காக செய்ததை மறந்துவிட வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்’ என ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.