ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவு பைனலில் பங்கேற்க இருந்த நிலையில், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். சரியான எடையுடன் களமிறங்கி ரவுண்ட் ஆப் 16, காலிறுதி, அரையிறுதி என தொடர்ச்சியாக 3 வெற்றிகளை அவர் வசப்படுத்தி இருந்த நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.
இந்த முடிவை எதிர்த்து வினேஷ் சார்பில் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் மேல்முறையீடு செய்தனர். இது தொடர்பாக விளையாட்டு போட்டிகளுக்கான நடுவர் நீதிமன்றம் நேற்று விசாரணை நடத்தியது. 3 மணி நேரத்துக்கும் மேலாக மத்தியஸ்தர் அனபெல் பென்னெட் நடத்திய விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு இன்று இரவு அறிவிக்கப்பட உள்ளது.