சென்னை: விநாயகர் சதுர்த்தி, சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நாளை முதல் செப்.19 வரை கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழநாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கோவை சுற்றுப்பகுதிகள் மற்றும் வெளி ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
கோவையில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகைக்கு செல்லவும் திரும்ப வரவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. ஏற்கனவே இயக்கபடும் பேருந்துகளுடன் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.