சென்னை: விநாயகர் சதுர்த்தி, வார இறுதிநாளையொட்டி நாளை (05.09.2024) முதல் செப்.7 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கபடும் என்று போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்புப் பேருந்து இயக்கப்படும். சேலம், கோவை, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு 125 பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கிளாம்பாக்கத்திற்கு 120 பேருந்துகளும், மற்ற பகுதிகளுக்கு 100 பேருந்துகளும் இயக்க திட்டமிட்டுள்ளனர்.