Thursday, September 19, 2024
Home » தொழில்நுட்ப கோளாறு காரணமாக விம்கோ நகர் – விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விம்கோ நகர் – விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!!

by Porselvi

சென்னை : சிக்னல் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை பாதிப்பால் பல ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பணிகள் முடிந்தவுடன் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “தொழில்நுட்ப கோளாறு காரணமாக, லிட்டில் மவுண்டில் இருந்து, அறிஞர் அண்ணா ஆலந்தூர் வரை, ஒற்றை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. விம்கோ நகர் டெப்போவில் இருந்து ப்ளூ லைனில் உள்ள லிட்டில் மவுண்ட் வரை சாதாரண சேவைகள் தற்போது இயக்கப்படுகின்றன. அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே ஷார்ட் லூப் சேவை திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமான சேவைகள் கிரீன் லைனில் இயக்கப்படுகின்றன. விம்கோ நகரில் இருந்து விமானம் நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் கிண்டியில் நிறுத்தப்பட்டுள்ளது. விம்கோ நகரில் இருந்து சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணிகள் வழக்கம் போல் பயணிக்கலாம்.விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூர் சென்று வழித்தடம் மாற்றி விமான நிலையம் சென்று அடையலாம். அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்,”என்று மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றொரு பதிவில், லிட்டில் மவுண்ட் டு விம்கோ நகர் டிப்போ – 5 நிமிட ஹெட்வேயுடன் சேவை, அறிஞர் அண்ணா ஆலந்தூர் விமான நிலையத்திற்கு – 5 நிமிட ஹெட்வேயுடன் சேவை, லிட்டில் மவுண்ட் டு அறிஞர் அண்ணா ஆலந்தூர் – 10 நிமிட ஹெட்வேயுடன் சேவை என்று குறிப்பிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi