விழுப்புரம்: விழுப்புரம் அருகே விஷச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மெத்தனால் ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் பழனி உத்தரவிட்டார். மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த மாதம் விஷச் சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தனர். சாராய வியாபாரிகள் முத்து, அமரன், ரவி, மண்ணாங்கட்டி, ஆறுமுகம் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.