விழுப்புரம் அருகே வீட்டு வேலை செய்யும் பெண் குத்தி கொலை: காரில் தப்பிய கொலையாளி விபத்தில் சிக்கிய போது கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே வீட்டு வேலை செய்யும் பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டது மனமகிழ் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வீட்டுவேலை செய்து வரும் கணவனை இழந்த பெண் சத்தியா (35) என்பவரை இன்று காலை காரில் வந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணை மீட்ட போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கத்தியால் குத்தி காரில் தப்பி சென்ற மர்மநபர் திருவண்ணாமலை சாலையில் திருக்கோவிலூர் போக்குவரத்து பனிமலை முன்பு விபத்தில் சிக்கியது போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சத்தியாவை குத்தி கொலை செய்த நபர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் பகுதியை சேர்ந்த முருகன் (46) என்பவருக்கும் உயிரிழந்த சத்தியாவிற்கும் இடையே தகாத உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலையில் ஏற்பட்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


