விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் விவசாய நிலத்துக்கு சென்று மின் மோட்டாரை இயக்கிய தம்பதி மின்சாரம் தாக்கி பலியாகினர். மின் மோட்டரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி கணவன் பெரியசாமி, மனைவி அம்பிகாபதி உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்தது தொடர்பாக அவலூர்பேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.