செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முக்கிய நிர்வாகிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், கிராம உதவியாளர்களுக்கும் அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களை அலுவலகப் பணிக்கு பயன்படுத்துவதை தவிர்த்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியினை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.